சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவின் இறுதித் தேரோட்டமான சத்தாபரணம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. கைலாய வாத்தியம் முழங்க முதல் தேரில் விநாயகரும், 2வது தேரில் நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் தேவகிரி அம்பாளும், மூன்றாவது தேரில் முருகன் வள்ளி தெய்வானையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.