பிரசித்தி பெற்ற கைலாசநாதர் குடவரைக் கோயிலில், ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்துள்ள வீரசிகாமணியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கைலாசநாதர் குடவரை கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ கைலாசநாதர் குடவரை கோயிலில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், நெய், இளநீர், பன்னீர், குங்குமம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிவடைந்த உடன் நந்தி பகவானுக்க சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.