கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1000-த்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதட்டூர்பேட்டை, அம்மையார் குப்பம், அத்திமாஞ்சேரிபட்டை ,சொரக்காய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து நூல், பாவு பெற்று லுங்கி உற்பத்தி செய்து மீட்டர் கணக்கில் கூலி பெற்று வருகின்றனர். இந்நிலையில், விலைவாசிக்கு ஏற்ப குறைந்தபட்ச கூலி உயர்வை உறுதிப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர்.