ஆபத்தான முறையில் மின்கம்பங்கள் : தஞ்சாவூர் மாவட்டம் காந்தவனம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் மின்கம்பங்கள், இடிந்து விழும் அபாயத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எட்டு தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து மேற்கூரையின் கற்கள் பெயர்ந்து காணப்படுவதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டில் வசித்து வருவதாகவும் கவலை தெரிவித்தனர். மேலும், பேருந்து வசதி கூட இல்லை என வேதனை தெரிவித்த மக்கள் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். Related Link மான் இறைச்சியை டோர் டெலிவரி செய்து விற்பனை