திருப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி உரிமையாளர்களை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு அரசு, விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கலந்துகொள்ளும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.