Also Watch
Read this
By: Manigandan Raja

இரவு நேரத்தில் மின்வெட்டு :
சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணா நகர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து 3 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது
அதுமட்டுமின்றி அங்கு இருக்கக்கூடிய மின்கம்பங்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி பழுதாகி இருப்பதால் இரவு பகலென அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி மின்வாரிய ஊழியர்கள் இரவு நேரங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதால் மூன்று நாட்களாக பொதுமக்கள் உறக்கமின்றி தவிக்கின்றனர்இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முற்பட்டால் யாரும் அழைப்பை ஏற்பதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மின்வெட்டை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved