சிவகங்கையில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மின்கம்பியில் காகம் அடிப்பட்டு இறந்ததுதான் அதற்கு காரணம் என மின்வாரியம் புகைப்படம் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.சிவகங்கை அரசு மன்னர் கலை கல்லூரியில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பரிசுகளை வழங்கி கொண்டிருந்தார்.அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் ஸ்டார்ச் பயன்படுத்தப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் மின் இணைப்பு சரி செய்யப்பட்டது.