கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பெய்த தொடர் கனமழை காரணமாக பொங்கல் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பானை தயாரிப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மண்பானைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் விறகு உள்ளிட்ட மூல பொருட்கள் நனைந்து சேதம் அடைந்ததாக மண்பானை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.