சென்னை போரூரில் இருந்து வடபழனிக்கு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களில் ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டி நிரப்பப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வடபழனி மட்டுமின்றி சாலிகிராமம், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன்பாக அவசர கதியில் சாலை சீரமைப்பு பணி அரைகுறையாக நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஜல்லிக்கற்கள் மீது இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல், பலர் தடுமாறி விழும் நிலையில், இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதையும் படியுங்கள் : கபடி வீரர் அபிநேஷை பாராட்டிய திருமாவளவன்