நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் கல்லூரியில் படிக்கும் முதுநிலை மாணவிக்கு, இரவில் போன் செய்த பேராசிரியர்கள் இருவர் மது அருந்த அழைத்தும், பாலியல் ரீதியாக தகாத முறையில் பேசியும் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூற, ஆத்திரமடைந்த அவர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.ஆனால் போலீசார் விசாரணையை துவங்குவதற்குள், தங்கள் மகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் புகார் மனுவை திரும்ப பெற்றனர்.மேல் நடவடிக்கை வேண்டாம் என்று பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு போலீசாரும் புகார் மனுவை திருப்பி அளித்தனர்.இதனிடையே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் இருவரும் கல்லூரி நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.