ராணிப்பேட்டையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று ஒட்டப்பட்ட சுவரொட்டியில், அமித்ஷா புகைப்படத்திற்கு பதிலாக திரைப்பட இயக்குநர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் 56 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷாவை வரவேற்பதற்காக, பாஜக சார்பில் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.