மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூர் ஊராட்சியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதாகவும், அதில் புல் முளைத்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேமாத்தூர் சிவன் கோவில் தெரு மற்றும் தெற்கு தெருவுக்காக 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை போடப்பட்டது. இச்சாலை கையோடு பெயர்ந்து வரக்கூடிய நிலையில் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியதோடு, தரமற்ற சாலையை அமைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.