சென்னை பூந்தமல்லி- போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை மொத்தம் 9.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு முறை போல் இல்லாமல் இம்முறை மறு மார்க்கமாக போரூரில் இருந்து பூந்தமல்லி பணிமனை நோக்கி ரயில் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.