திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோயிலின் கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தரகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள பழனி முருகன் கோயிலின் உப கோயிலான குழந்தை வேலப்பர் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 20 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தினந்தோறும் சேவல், யானை, மயில், காளை ஆகிய வாகனங்களில் முருகன் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.