விருதுநகரில் பெரிய மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூரில் 100 ஆண்டுகள் பழமையான பெரிய மாரியம்மன் கோயிலின் பூக்குழி திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 12 ஆம் நாளான பூக்குழி இயங்கும் விழாவில் 12 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மஞ்சள் நீரை உடம்பில் ஊற்றி, நான்கு ரத வீதி வழியாகச் சுற்றி வந்து தீக்குழியில் இறங்கினர்.