நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த சிறியூர் மாரியம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடப்பட்டு வழிபாடு நடைபெற்றது.