சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் கேரம் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாடு கேரம் அசோசியேசன் மற்றும் சேலம் மாவட்ட கேரம் அசோசியேசன் சார்பில் பொன்னம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் போட்டிகளை பயிற்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.