செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அரசுத் தரப்பு சாட்சிகள் ஆஜராகாத நிலையில், விசாரணையை 14-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி உட்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி, கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும், அரசுத் தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை.