பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திருவாரூர் முத்துப்பேட்டையில் பொங்கல் பானை விற்பனை மந்தமாக உள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காட்டு கிராமத்தில், பொங்கல் பண்டிக்கைகாக பொங்கல் பானை உள்ளிட்ட பல்வேறு மண்பாண்டங்கள் தயாரித்து விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் வியாபாரம் மந்தமாக உள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர். எனவே அரசு பொங்கல் தொகுப்போடு பொங்கல் பானைகளை சேர்த்து வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றனர்.