சென்னை, சைதாப்பேட்டை, சின்னமலை நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான விநியோகத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனோடு இலவச வேட்டி சேலை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.