சென்னை, ஆலந்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு3 ஆயிரம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மளிகை பொருட்கள், புடவை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டனகாஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில், சென்னை ஆலந்தூரில் திராவிட பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். அப்பொழுது, மேடைக்கு பரிசு பொருட்களை வாங்க வந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், உதயநிதி ஸ்டாலினை அருகில் பார்த்ததும், மேடையில் துள்ளி குதித்து, உதயநிதி உடன் போட்டோ எடுத்துக் கொண்டார். சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மளிகை பொருட்கள் புடவை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.