நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புதுக்காடு பகுதியில் பழங்குடியின மக்களுடன் இணைந்து காவல்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர். இதில் பங்கேற்ற சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள், கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று உற்சாகம் அடைந்தனர்.