சென்னை, எழும்பூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் சிபிஎம் வாக்குசாவடி முகவர்களுக்கும், அதிமுக முகவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குசாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில், சிபிஎம் முகவர்கள், ஒரு மாத காலத்தில் வீடு வீடாக சென்று படிவங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்று மாநகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினர் ஒரு மாதத்தில் படிவங்களை கொண்டு சேர்க்க முடியும் என கூச்சலிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டமானது, எழும்பூர் சிராஜ் மஹாலில் நடைபெற்றது. சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 169 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். அப்போது, சிபிஎம், அதிமுகவினர் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.இந்நிலையில், சென்னையில் வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையும் பாருங்கள் - SIR பயிற்சிக் கூட்டத்தில் வாக்குவாதம் - பரபரப்பு வீடியோ | Chennai SIR training meeting | ADMK