மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவது அரசியலா, நாங்கள் வேண்டாம் என்று மறுப்பது அரசியலா என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.