கல்யாண புரோக்கர்கள் போல, தற்போது அரசியல் புரோக்கர்கள் அதிகரித்து விட்டதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளரிடம் பேசிய வீரமணி, பாமக நிறுவனர் ராமதாசை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது குறித்த கேள்விக்கு, முன்னொரு காலத்தில் சம்மன் இல்லாமலேயே அரசியல் ரீதியாக ஆஜராகும் புரோக்கர் ஒருவர் இருந்தார், தற்போது சம்மன் வாங்கிக் கொண்டு ஆஜராகும் புது புரோக்கர் கிளம்பியுள்ளார் என பதில் அளித்தார்.