இரவு 11 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்திருந்ததால் பேக்கரி கடை ஊழியரை காவலர் ஒருமையில் பேசி தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.திருச்சி - மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால் இரவு 11 மணிக்கு மேல் கடையை மூடுமாறு ராம்ஜிநகர் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கணபதி என்பவரின் பேக்கரிக்கு சென்று டீ குடித்த காவலர்கள், விரைந்து கடையை மூடுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.ஆனால் கடைக்கு கதவு இல்லாததால், முன்பக்க விளக்கை மட்டும் அணைத்த நிலையில், மீண்டும் ஒரு மணியளவில் அங்கு வந்த காவலர்களில் ஒருவர் ஊழியரை சரமாரியாக தாக்கினார்.