தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் மீண்டும் சென்னைக்கு படையெடுத்ததால், செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்காக காவலர்கள் கால் கடுக்க பணியாற்றினர். பாலாறு மெய்யூர் ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், அசம்பாவிதங்களை தடுக்கும் பணியிலும், போக்குவரத்து காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஈடுபட்டனர்.