நாகை அருகே திருமருகலில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற, முகமூடி அணிந்த மர்ம கும்பலை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் தெற்கு வீதியை சேர்ந்த ராஜா, தனது இருசக்கர வாகனத்தை வழக்கம் போல் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வாகனத்தின் லாக்கை உடைக்க முயன்று, அது முடியாமல் போகவே தள்ளி சென்றனர்.