விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக மாநாடு பார்கிங் வசதிக்கு கூடுதல் இடத்தை ஏற்படுத்த காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் பார்கிங் பகுதியை ADSP ரவீந்திர குமார் குப்தா மற்றும் DSP நந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பார்கிங் செய்வதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 55 ஏக்கர் இடம் போதாது எனவும், 75 ஏக்கரில் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் காவல்துறையினர் வலியுறுத்தினர்.