சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை விரையில் கைது செய்ய வலியுறுத்தி, மருத்துவர்கள் கருப்புச்சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களிடம் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய இரண்டு நாள் அவகாசம் கோரினர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்ட பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.