விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளி மாநிலத்தை சேர்ந்த இரு மாணவர்கள் 500 கிராம் கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனையிட்ட போது சிக்கினர்.