நாமக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரவுடிகள் உள்பட சுமார் 25 பேரை ஒரே நாளில் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த நபர்களையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.