சென்னையில் காவலர் குடியிருப்பில் தவறி விழுந்து உயிரிழந்த ஆயுதப்படை காவலரின் உடலுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். எழும்பூரில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்பின் 14ஆவது மாடியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஆயுதப்படை காவலர் செல்வமுருகன் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து காவலர் செல்வமுருகனின் உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர், சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் தர்மராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.