விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காதலனுடன் சென்ற சிறுமியை பிடித்து பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறிய காவலர், சிறுமியை பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் இளங்கோவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த திண்டிவனம் மகளிர் போலீசார், கடலூர் மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து, அத்துமீறல் காவலர் இளங்கோவன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வானூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவனும் பத்தாம் வகுப்பு மாணவியும் பழகி வந்த நிலையில், இருவரும் தங்களது வீட்டிற்கு தெரியாமல் கடந்த 6ஆம் தேதி, சென்னை சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், மகளை காணவில்லை என்று, சிறுமியின் பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பின்னர், சென்னையிலிருந்து திரும்பிய இருவரும் இரவில் மன்னார்சாமி கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, பிரம்மதேசம் காவல் நிலைய காவலர் இளங்கோ என்பவர் இருவரையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வந்ததை அறிந்த காவலர் இளங்கோ, பள்ளி மாணவனை மட்டும் வீட்டிற்கு அனுப்பியதாக தெரிகிறது. சிறுமியிடம் பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறிய இளங்கோ, பிரம்மதேசம் காவல் நிலையம் அருகே உள்ள பாழடைந்த வீட்டிற்கு அழைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.பின்னர், அதிகாலையில் சிறுமியை வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர் இளங்கோ, எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், காவலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், சம்பவம் குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த திண்டிவனம் மகளிர் போலீசார் காவலர், இளங்கோவை விசாரித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், காவலர் இளங்கோவை விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கடலூர் மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.பணியில் இருந்து பாதுகாப்பு தர வேண்டிய காவலரே, சிறுமியை பாதுகாப்பாக அழைத்து செல்வதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையும் பாருங்கள் - Police POCSO Arrest | பாதுகாப்பு தருவதாக கூறி அத்துமீறல், சிறுமியிடம் பா*யல் சீண்டல் | Viluppuram