திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பெரிய கொம்மேஸ்வரத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபனாவின் கணவர் கோவிந்தராஜ், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் உறவினர் சந்தோஷ் என்பவர் ஷோபனாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில், உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த ஷோபனா, தற்போது தாய் வீடான வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சீவூரில் வசித்து வருகிறார். இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ஷோபனா வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கார் கண்ணாடியை அடித்து உடைத்ததோடு, வீட்டையும் சூறையாடினர்.