சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் தாய், தந்தை, 2 வயது குழந்தை என ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலைம றியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை போலீஸார் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.காவல்துறை வாகனம் மோதி குடும்பமே பலியான நிலையில், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள்தான் இவை...மதுரை மாவட்டம், சிட்டம்பட்டியை சேர்ந்த பிரசாத், தனது மனைவி சத்யா, 2 வயது மகன் அஷ்வின் ஆகியோருடன், உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, அனஞ்சியூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். இறுதிச் சடங்கு முடிந்து உறவினர் சோனை ஈஸ்வரியையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு 4 பேரும் சக்குடி - பூவந்தி சாலை வழியாக ஊர் திரும்பினர். சக்குடி அருகே சென்றபோது, எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வாகனம், இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில், பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி சத்யாவும், மகன் அஷ்வினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சோனை ஈஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உறவினர்கள், உயிரிழந்த பிரகாஷின் உடலை எடுக்க விடாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, உறவினர்களை போலீஸார் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், போலீஸாரை கண்டித்தும், காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ்காரரை கைது செய்ய வலியுறுத்தியும், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல, உறவினர்களில் மற்றொரு தரப்பினர் திருப்புவனம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், ஜீப் ஓட்டுநரை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனவும், உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையும் பாருங்கள் - கூட்டத்தோடு கூட்டமாக நின்ற கொ*லயாளி, நெஞ்சை பதற வைக்கும் காட்சி | Virudhunagar temple issue