கோவையில் ஈஷா யோகா மையத்தின் செயல்பாடுகள் குறித்து 2 ஆவது நாளாக போலீஸார் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், நீதிமன்ற உத்தரவின்படி , ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் விவரங்கள் 4 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.