திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே தனியார் கல்லூரி பேராசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பகுதியை சேர்ந்த லீவியா கல்லூரி நேரம் முடிவதற்கு முன்னமே வெளியேறி விரைவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.