திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாதுக்கள் என்ற பெயரில் தங்கியுள்ள சிலர் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 6 டிஎஸ்பிக்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 போலீசார், கிரிவல பாதையில் தங்கியுள்ள சாதுக்களின் உடமைகள், அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.