நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முன் விரோதம் காரணமாக நண்பனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தவனை போலீசார் கைது செய்தனர். ராசிபுரத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கட்டும் வீட்டின் மேற்பரப்பில் கூலிங் அட்டை அமைப்பதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த 4 இளைஞர்கள் இரவு வந்தனர். அதில் மோகன்ராஜ், விஜயன் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று போதையில் விஜயன் என்பவன் மோகன்ராஜை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.