விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் 5 கோடி ரூபாய் கையாடல் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள சூலக்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்த அமர்நாத்,அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் அயற்பணியாளராக பணிபுரிந்த போது கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி 5 கோடி ரூபாயை கையாடல் செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதில் தலைமறைவானவரை தேடி வந்த தனிப்படையினர் பந்தல்குடி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கோடியே 58 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது.