ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட இளைஞர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஏற்காடு காவல்துறையினர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ், சிவா, பிரவீன், கார்த்திக், அரவிந்த் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்களது விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இளைஞர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறிய பின்னர், காவல்நிலைய பிணையில் இளைஞர்களை வெளியில் விட்டனர். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காவல்நிலைய பிணையில் வெளியே விட்டதாகவும், இனி இதுபோல் யார் செய்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.