ஈரோடு மாவட்ட ஆட்சியரின் சீல் மற்றும் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். வீரப்பன் சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு போலியாக அனுப்பியுள்ள கடிதத்தில், ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா பெயரையும், மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி சுகுமார் பெயரையும் முறைகேடாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது.