தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மூடப்பட்ட கல்குவாரிக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்து மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆலந்தா கிராம மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின்படி கல்குவாரி மூடப்பட்ட நிலையில், அந்த நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் போலீசார், தங்களை துன்புறுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.