தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விநாயகர் ஊர்வலத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சங்கரன்கோவிலில் இந்து முன்னணி சார்பில் 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலையில் கரைக்கப்படவுள்ளது.இதனையொட்டி பாதுகாப்பிற்காக டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.