நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அதிகாலையிலேயே காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறை வளாகத்திற்குள் கைதிகளிடையே தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி, பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையிட்டனர். கைதிகள் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு அறைகள், சமையலறை, கழிவறைகள் என அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.