துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இழிவுபடுத்தியதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா அளித்த புகாரில், பவன் கல்யாணின் பேச்சு ஆந்திர - தமிழக மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி, மோதலை தூண்டும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது பேச்சால் ஆந்திராவில் ஒரு தரப்பினர் உதயநிதியை விமர்சித்திருந்த போஸ்டர் மீது ஏறி மிதித்து இழிவுபடுத்தியது கண்டிக்கத்தக்கது எனவும், அச்சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, பவன் கல்யாண் மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.