கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்றதாக சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். நெல்லிகுப்பத்தை சேர்ந்த குமார் அளித்த புகாரின் பேரில் அங்கு பதிவான சிசிடிவி காட்சியை வைத்து 3 பேரை பிடித்தனர்.