ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக் கூறி நெல்லை மற்றும் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தை பரபரப்புக்குள்ளாக்கிய பெண், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த மங்கையர்கரசி, தாம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக் கூறி, தனது கணவருக்கு துப்பாக்கி உரிமம் வேண்டும் என கேட்டுள்ளார்.சந்தேகமடைந்து போலீஸார் விசாரித்ததில் அவர் போலி அதிகாரி என்பது தெரியவந்தது.