செங்கல்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து மூன்று கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளையடித்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.பஜார் பகுதியில் நள்ளிரவில் துணிக்கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், அருகில் உள்ள துணிக்கடையில் 3 ஆயிரம் ரூபாயும் மற்றும் அதே பகுதியில் உள்ள மொபைல் போன் கடையில் 6000 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் திருடுபோயின.